இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் – பிரதமர் ரணில்
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்:
நாட்டில் இருக்கின்ற பொருளாதார பின்னணிக்கு அமைவாக கடற்தொழில் துறையினைப் பாதுகாப்பதற்காக நாளாந்தம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்துடன் ஏற்படுத்தியிருக்கின்ற இணக்கப்பாடிற்கு அமைவாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
சிறிய மீன்பிடி படகுகளுக்கான மண்ணெண்ணெய் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினூடாக இலங்கையிலுள்ள 15 மாவட்டங்களில் செயற்படுத்தப்படுகின்றன .
மேலதிகமாக தெரிவு செய்யப்பட்ட நிரப்பு நிலையங்களுக்கு டீசல் கிடைக்கப்பெற்றவுடன் அவற்றை மீன்பிடித் தொழிலாளர்களுக்கு மாத்திரம் சரியான முறைமை ஒன்றினை உருவாக்குவதற்கு மாவட்ட செயலகங்கள் ஊடாக மாவட்ட அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் இருக்கின்றது இதனைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்போம்.இந்த விடயம் சார்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கலந்துரையாடலினை மேற்கொள்வோம் .எதிர்வரும் காலங்களில் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் என்றார்.