கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

Prabha Praneetha
2 years ago
கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

கொழும்பில் நாளை  மற்றும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நாளை (08) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.

அதேநேரம், 9ஆம் திகதியும் கோட்டா கோ கம போராட்டக்காரர்களுடன் இணைந்து எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் பேரணியை ஆரம்பித்து கோட்டை ஜனாதிபதி மாளிகை வரை செல்ல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஜனாதிபதி செயலகம், டெம்பில் லேன், பிரதமர் இல்லம் மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்து பொது ஒழுங்கை முகாமைத்துவம் செய்யுமாறு கட்டளை அதிகாரி விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்காக கடமைகளில் ஈடுபடுவதற்கு பெருமளவிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!