இராணுவ அத்துமீறல் விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல மக்கள் பிரயத்தனம்

Kanimoli
2 years ago
இராணுவ அத்துமீறல் விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல மக்கள் பிரயத்தனம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தின் தீர்த்த வீதி மற்றும் பரியலம் விடும் இடம் என்பனவற்றை இராணுவத்திடம் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் தமக்கு அந்த இடங்கள் தேவை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த விவகாரத்தை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை தீர்த்தம் எடுப்பதற்காக முல்லைதீவு பெருங்கடலை நோக்கி அடியவர்கள் சென்றுபோது இராணுவத்தினர் தடை விதித்திருந்தனர்.

அத்துடன் ஆலய பரியலம் விடும் இடத்திலே போடப்பட்டு இருந்த தூண்கள் கதவுகள் முற்று முழுதாக இடித்து அகற்றப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக முல்லைத்தீவு காவல் நிலையத்தில் ஆலய நிர்வாகம் சார்பிலும் இராணுவம் சார்பிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது தமது கோரிக்கைகளுக்கு இராணுவம் இணங்கவில்லை எனவும் தம்மை அச்சுறுத்தும் பாணியில் கதைத்ததாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!