கண்ணீர் புகை , நீர்த்தாரை பிரயோகம் , துப்பாக்கியால் சுட்டு மக்களை ஒருபோதும் கட்டுப்படுத்த வேண்டாம் - சரத் பொன்சேகா

Kanimoli
2 years ago
கண்ணீர் புகை , நீர்த்தாரை பிரயோகம் , துப்பாக்கியால் சுட்டு மக்களை ஒருபோதும் கட்டுப்படுத்த வேண்டாம் - சரத் பொன்சேகா

அரசாங்கத்திற்கு எதிராக நாளை (9ம் திகதி) கொழும்புக்கு வரவுள்ள மக்களை ஒடுக்குவதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் துப்பாக்கியால் சுட்டு மக்களை ஒருபோதும் கட்டுப்படுத்த வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பொலிஸாரிடமும் இராணுவத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் கூட்டமாக இருக்கும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் இவ்வாறான காரியங்களைச் செய்வதால் பீதியடைந்து ஓடும் மக்கள் மிதிபட்டு உயிரிழக்கக் கூட வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் நாட்டில் அண்மைக்காலம் போன்று மீண்டும் வன்முறை வெடிக்கும் சூழல் உருவாகலாம் என எச்சரித்த சரத் பொன்சேகா, இது தொடர்பில் அரசாங்கம் கவனமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

மேலும், நாளை (9ம் திகதி) நடைபெற உள்ள அரசுக்கு எதிரான போராட்டம் நூறு வீதம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாம் திகதி கொழும்பை சுற்றிவளைப்போம்
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பிக்குகள், கிறிஸ்தவ மதகுருமார்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஒன்பதாம் திகதி சுற்றிவளைப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள பல அமைப்புக்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.           

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!