வேகமாகப் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ் தொடர்பில் கடுமையான அறிவுறுத்தல்
தற்போது வேகமாகப் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ் தொடர்பில் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கடுமையான பாதிப்பு
அதன்படி கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் இந்த வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மகப்பேற்று மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் சனத் லெனாரோல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வைரஸ் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்கள் முடிந்தவரை முகக் கவசம் அணிய வேண்டும். வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இந்த நாட்களில் காய்ச்சல் ஏற்படுமிடத்து உடனடியாக மகப்பேற்று மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரை சந்தித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல் கட்டாயமாகும்.
தாயும் குழந்தையும் கூடிய விரைவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க தேவையான சிகிச்சை அளிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.