உலக நாடுகளுக்கு மத்தியில் பேசுபொருளாக மாற்றியுள்ள இலங்கை -சைக்கிள்களுடன் வந்த சுற்றுலாப்பயணிகள்
உலக நாடுகளுக்கு மத்தியில் இலங்கையை பேசுபொருளாக மாற்றியுள்ளதோடு, நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை, உணவு நெருக்கடி, மின்சாரம் இன்மை என்பவற்றால் நாடு வெகுவிரைவில் முற்றிலும் ஸ்தம்பிதமடையும் அபாய நிலையை எதிர்கொண்டுள்ளது.
இதன் காரணமாக, இலங்கைக்கு அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறையான சுற்றுலாத்துறை கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கு வந்த சில சுற்றுலாப் பயணிகள் தம்மோடு சேர்த்து சைக்கிள்களையும் கொண்டு வந்துள்ளனர்.
இது தொடர்பான காட்சிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவாகியுள்ளன.
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து பலரும் சைக்கிள் கொள்வனவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக சைக்கிள்களின் விலை பாரியளவில் அதிகரித்து காணப்படுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெளிநாட்டில் இருந்த வருகைத்தந்த சிலர் தம்முடன் சைக்கிளையும் சேர்ந்து கொண்டு வந்துள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு, பிரித்தானியா – நியூஸிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.