பொலிஸ்மா அதிபரின் விசேட அறிவிப்பு
அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான மக்களின் உரிமையை பொலிசார் மதிக்கின்றனர்.
அதேவேளை , பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உரிமைகளை சட்ட கட்டமைப்பிற்குள் பயன்படுத்துமாறும் பொது மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை மதிப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
சட்ட கட்டமைப்பிற்குள் மக்கள் தமது உரிமைகளை அனுபவிக்க வேண்டியது அவசியமாகும். சமாதானத்தை சீர்குலைக்கும் அதேபோல் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் எந்த செயற்பாட்டிலும் செயற்பாடுகளிலும் ஈடுபட கூடாது.
மக்களின் கருத்து வெளியிடும் உரிமைக்கு பொலிசார் எப்போதும் மதிப்பு அளிப்பதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார். அமைதி வழியிலான கூட்டங்களுக்கு ஆதரவளிக்க பொலிசார் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.