பாதுகாப்பு பிரிவில் மாற்றம் ஹிருணிக்கா குழுவினர் ஆர்ப்பாட்டம்

Kanimoli
2 years ago
பாதுகாப்பு பிரிவில் மாற்றம் ஹிருணிக்கா குழுவினர் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேராவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு பதிலாக, குருநாகல் மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனில் பிரியந்தவிற்கு அந்தப் பொறுப்பை வழங்க பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பு சாவடிகளை கடந்து ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீதியில் இருந்த முதலாவது பொலிஸ் வீதித் தடையையும் இராணுவ வீதித் தடையையும் தகர்த்துவிட்டு ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் வரக்கூடிய அளவிற்கு பாதுகாப்பு பலவீனமாக காணபட்டதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றம் தொடர்பான இறுதி தீர்மானம் பொலிஸ் மா அதிபரினால் எடுக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரிய ஹிருணிக்கா தலைமையிலான குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் சிறு குழுவாக ஒன்று கூடியவர்களின் திடீரென பெருந்திரளாக மாறியமையினால் பதற்ற நிலைமை ஏற்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!