இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயார்: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
Reha
2 years ago
இலங்கையில் நடைபெற்று வரும் அபிவிருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் , சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க அனுமதித்து தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறிப்பாக ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மீது நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சர்வதேச நாணய நிதியம் இன் கொள்கைகளுக்கு இணங்க, இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.