மகிந்த அமரவீர தனது பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்
Kanimoli
2 years ago
விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தனது பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
நேற்று (09) இலங்கைக்கு வந்த யூரியா உரத்தின் இருப்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் இன்று (10) காலை பதவி விலகினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று காலை 40,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிக்கொண்டு இந்திய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்தது.
இது இந்திய கடன் உதவியின் கீழ் அந்த நாட்டிற்கு சொந்தமானது.