உலக சர்வாதிகாரிகளின் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய
Kanimoli
2 years ago
உலகில் உள்ள சர்வாதிகாரிகளை போன்று நாட்டிலிருந்து தப்பிச்செல்ல வேண்டிய நிலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் (Gotabaya Rajapaksa) ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க (Anura kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மக்களின் விருப்பத்திற்கு பணிந்து, தலைமறைவாக இருந்து தனது அதிகாரத்தை பாதுகாக்க முயன்ற கோட்டாபயவிற்கு உலகின் ஏனைய சர்வாதிகாரிகளின் தலைவிதியைப் போன்று தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவும், ரணில் விக்கிரமசிங்கவும் அதிகாரத்தை துறப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாததால், அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.