பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன

Kanimoli
2 years ago
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன

நேற்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பிற்கு வருகை தந்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தியிருந்தனர். அதற்கமைய, ஜனாதிபதி அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது..

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எந்தவொரு பொது சொத்துகளும் எரிக்கப்படவோ அல்லது சேதப்படுத்தவோ இல்லை. அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினரும் இல்லை. அவ்வாறு அமைதியான முறையில் நடந்துக் கொண்டவர்கள், பிரதமரின் தனிப்பட்ட வீட்டுக்கு தீ வைப்பதற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரதமரின் வீட்டிற்கு தீ வைப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டதோடு வைத்தியசாலைக்கு வந்த ஏனைய ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேற்ற பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பாவிப் ஊடகவியலாளர்களை தாக்கிய பொலிஸார், பிரதமர் வீட்டுக்குள் நுழைந்தவர்களைத் தடுக்கவும் தாக்கவும் இல்லை என தெரியவந்துள்ளது.

நேற்று காலை ரயில் சேவைகள் இடம்பெறாத நிலையில் கூட, பொது போக்குவரத்து சேவையை பெற போராடிய இளைஞர்கள் பேச்சுவார்த்தை மூலம் அதனை பெற்றுக்கொண்டனர்.  

எந்தவொரு பொது போக்குவரத்து சேவையிலும் ஒரு கண்ணாடியேனும் சேதமடையவில்லை. இவ்வாறானதொரு நிலையில் இடம்பெற்ற இச்சம்பவம், போராட்டக்காரர்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக சிலர் திட்டமிட்டு செய்தார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பிரதமரின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு சேதம் விளைவித்தமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என பலதரப்பினரால் கூறப்பட்டுள்ளது.

ஏனெனில் அது அவர்ககளுக்கு பின்னர் ரோயல் கல்லூரியின் பெயரில் சொத்து உயில் எழுதி வைத்துள்ளதுடன் அது மதிப்புமிக்க சொத்தாகும் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை பிரதமரின் வீட்டின் தாம் எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!