குடிமக்கள் அமைதியை பேணுமாறு கோரிக்கை
Prabha Praneetha
2 years ago
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ள வேளையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்து குடிமக்களும் ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு தமது ஆதரவை வழங்குமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக கோரி நேற்று மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே சவேந்திர சில்வா மக்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார் .