இன்று பிற்பகல் இலங்கையை வந்தடையவுள்ள மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள்.
Prabha Praneetha
2 years ago
3 ஆயிரத்து 700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் 3 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக அந்த கப்பல் இலங்கையை வந்தடைய தாமதமாகியுள்ளது.
அதேவேளை நாளை மறுதினம் மற்றும் 16 ஆம் திகதியும் மேலும் 3 ஆயிரத்து 700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் 30 ஆயிரம் மெற்றி தொன் எரிவாயு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன.