ஜனாதிபதி மாளிகையில் கிடைத்த 17.5 மில்லியன் ரூபா பணத்தை அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரி அழுத்தம்

Prathees
2 years ago
ஜனாதிபதி மாளிகையில் கிடைத்த 17.5 மில்லியன் ரூபா பணத்தை அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரி அழுத்தம்

ஜனாதிபதி மாளிகையில் கிடைத்த பணத்தை அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கோட்டை பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட பதினேழரை மில்லியன் ரூபா பணத்தை அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ் உயர் அதிகாரியொருவர் விடுத்த கோரிக்கையை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சாதாரண மக்கள் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்தபோதே இந்த தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஜனாதிபதி மாளிகையில் கடமையாற்றிய விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷேதா பெர்னாண்டோவிடம் பணத்தை வழங்க குழு தீர்மானித்துள்ளது.

ஆனால்இ போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சாதாரண மக்களிடம், பணத்தை ஏற்றுக்கொள்வது சட்டப்படி செல்லாது என, கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு, பொலிஸ் அதிகாரி பணிவுடன் தெரிவித்துள்ளார்.

பின்னர் குறித்த குழுவினர் 17.5 மில்லியன் ரூபா பணத்தை கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளனர். அதன் பின்னர், அந்தத் தொகையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்களை அந்தத் தருணத்தில் நிலையத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகே செய்துள்ளார்.

பணம் கிடைத்த இடத்திற்கு உடனடியாக பொலிஸ் அதிகாரிகள் குழுவை அனுப்பி அந்த இடத்தை படம் பிடித்து பணத்தை ஒப்படைத்தவர்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில்இ அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட பணத்தை ஒப்படைக்குமாறு கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் பணிப்புரை விடுத்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.

குறித்த தொகையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தாம் செய்துள்ளதால் பணத்தை அபகரிக்க முடியாது என கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி சம்பந்தப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

அப்படியிருந்தும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பணத்தை ஒப்படைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தொடர்ந்து கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தொகை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அதனை எவருக்கும் வழங்க மாட்டோம் எனவும் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதி சம்பந்தப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளதாக  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!