உனக்கு வெட்கமே இல்லையா' என்று மனோஜ் ராஜபக்சவின் வீட்டை நோக்கி கூச்சலிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்
Kanimoli
2 years ago
இலங்கையில் பொதுமக்களால் விரட்டப்பட்டு, தலைமறைவாகிவிட்டுள்ள சிறிலங்காவின் அரசதலைவர் கோட்டாபாயவின் மகன் மனோஜ் ராஜபக்சவின் விட்டின் முன்பாகத் திரண்ட சில அமெரிக்க இலங்கையர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
'உனக்கு வெட்கமே இல்லையா' என்று மனோஜ் ராஜபக்சவின் வீட்டை நோக்கி கூச்சலிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து கட்டப்பட்ட வீடு என்று எழுதிய பதாதைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
அந்த வழியாகச் சென்ற அயலவர்களிடம், 'இவரது தந்தை எமது மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து கட்டிய சொகுசு பங்களாதான் இது..' என்று கூறியபடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.