ஐரோப்பியம் விடுத்துள்ள ஒன்றியம் கோரிக்கை
Prathees
2 years ago
இலங்கையின் நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான வழியை தயாரித்து இலங்கையை வழமைக்கு கொண்டு வர வேண்டியது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் பொறுப்பாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அலுவலகம், இன்று (10) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக மற்றும் அமைதியான அதிகார பரிமாற்றத்தில் கவனம் செலுத்தி அதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் ஆதரவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.