வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்ற பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை
Prathees
2 years ago

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்திற்கு வந்தடைந்த போது அங்கிருந்த குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் கடமையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு குடிவரவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதன்போது குடிவரவு அதிகாரிகள், தமது கடமைகளை புறக்கணித்தமையை அடுத்து, பசில் ராஜபக்ச மீண்டும் நாட்டுக்குள் திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



