இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் கோட்டா !
Prabha Praneetha
2 years ago
இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கையெழுத்திட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து, இராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை புதன்கிழமை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றைய தினம் பிபிசி ஊடகத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இல்லை என்றும் அருகில் உள்ள நாடொன்றில் இருப்பதாகவும் சபாநாயகர் கூறியிருந்தார்.
இருப்பினும் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் அதனை மறுத்திருந்த சபாநாயகர், தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டதாகவும் ஜனாதிபதி நாட்டில் இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த நடவடிக்கை பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.