ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பு
Nila
2 years ago
முன்னதாக அறிவித்தபடி இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சில நிமிடங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தமக்கு தொலைபேசி மூலம் இதனை அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட போராட்ட நிலைமையை கருத்திற்கொண்டு இன்று தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக ஜனாதிபதி சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய ஜனாதிபதியை எதிர்வரும் 20ஆம் திகதி தெரிவுசெய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.