ஆத்திரமடைந்த பயணிகள் - பாணந்துறை ரயில் நிலையத்தை தாக்கி சொத்துகளுக்கு சேதம்
Kanimoli
2 years ago
ரயில் சேவைகள் திடீரென இரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள், இன்று பகல் பாணந்துறை ரயில் நிலையத்தை தாக்கி, சொத்துகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின் போது, ரயில் நிலையத்தின் டிக்கட் விநியோகிக்கும் பகுதி மற்றும் பொருள் களஞ்சியசாலைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாணந்துறை பொலிஸார் தலையிட்டு நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதேவேளை கடந்த 12 நாள்களுக்குள் இரண்டாவது தடவையாக பாணந்துறை ரயில் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.