கோட்டாபயவுக்கு முதல் ரணில் பதவி விலக வேண்டும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு
Kanimoli
2 years ago
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவால் இன்று அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று மலை 5 மணியளவில் கட்சி கூட்டம் ஆரம்பமாகியது.
இதன் போதே நாட்டில் தற்போது இடம் பெறும் போராட்டங்களை நிறுத்தும் முகமாக சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.