சிறிலங்கா அதிபரின் பதவி விலகல் சிங்கப்பூரில்

Kanimoli
2 years ago
சிறிலங்கா அதிபரின் பதவி விலகல் சிங்கப்பூரில்

மாலைதீவில் தரையிறங்கிய சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூருக்கு செல்லவுள்ளதாகவும், அங்கு சென்றதும், தமது பதவி விலகலை அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று மாலை இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் இதனைக் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவுக்கு அழைத்துச் செல்ல, அந்நாட்டின் முன்னாள் அரச தலைவரும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் ஏற்பாடுகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய செய்திச் சேவை ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த ஏற்பாடுகளை இந்தியா மேற்கொண்டது என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அதனை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!