இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் - பிரித்தானிய எம்.பி கோரிக்கை!

Nila
2 years ago
இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் - பிரித்தானிய எம்.பி கோரிக்கை!

ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல் காரணமாகவே இலங்கை மக்களுக்கு தற்போதைய பயங்கரமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.ராஜபக்ச அரசின் ஊழல், வரி குறைப்பு, உயரும் பாதுகாப்பு செலவுகள் மற்றும் கொடூரமான பொலிஸ் அதிகாரங்கள் ஆகியவற்றால் இலங்கையில் பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.

இலங்கையில் உள்ள ஜனநாயகவாதிகளை ஆதரிப்பதற்காக ஒரு முழுமையான பொருளாதார மற்றும் அரசியல் தீர்விற்காக ஐக்கிய இராச்சியம் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று டேவி பரிந்துரைத்தார்.

மேலும், தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் உட்பட நாட்டிலுள்ள அனைவரினதும் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!