ரஷ்யாவின் நடவடிக்கையாலேயே இலங்கை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது: உக்ரைன் ஜனாதிபதி!

Prabha Praneetha
2 years ago
ரஷ்யாவின் நடவடிக்கையாலேயே இலங்கை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது: உக்ரைன் ஜனாதிபதி!

உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்களை தடைசெய்தமை உலகம் முழுவதும் அமைதியின்மையை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டிய உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

சியோலில் நடந்த ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் தனது உரையின் போது, உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பல தந்திரோபாயங்களை பயன்படுத்தியதாகவும், அவற்றில் ஒன்று " பொருளாதார அதிர்ச்சியை" உருவாக்குவதாகும் என ஜெலென்ஸ்கி கூறினார்.

விநியோகச் சங்கிலியில் நிலவும் நெருக்கடி மற்றும் சீர்குலைவு  காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை நாடுகள் சந்திக்கும் நிலையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இது ரஷ்யாவின் நிகழச்சி நிரலுக்கு பயனளித்துள்ளது.

இது எங்களுககு மட்டுமல்ல, ஒரு உதிரணத்தை மட்டும் பாருங்கள் - இலங்கையில் நடந்த நிகழ்வுகள், அதிர்ச்சியூட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஒரு சமூக வெடிப்புக்கு வழிவகுத்தது. அது எப்படி முடிவடையும் என்று இப்போது யாருக்கும் தெரியாது.  

இருப்பினும், உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளிலும் இதேபோன்ற வெடிப்புகள் சாத்தியமாகும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

இந்த நெருக்கடிகளின் தீவிரத்திற்கு என்ன காரணம்? ரஷ்யாவின் இழிந்த முற்றுகை, எங்கள் துறைமுகங்களில் இருந்து உலக சந்தைக்கு முக்கியமான உக்ரேனிய உணவு விநியோகத்தை செய்யவில்லை.

மேலும் எரிசக்தி விலைகளை உயர்த்துவதும் ரஷ்யாவின் இன்னொரு நகர்வு என்றார்.