உடனடியாக புதிய ஜனாதிபதியை நியமிக்குமாறு டலஸ் வலியுறுத்து!
Prabha Praneetha
2 years ago
அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடந்த 9ஆம் திகதி ஏற்றுக்கொண்டவாறு செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம், உடனடியாக புதிய ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் எனவும், பின்னர் ஒப்புக்கொண்டபடி புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனை ஒத்திவைப்பதன் மூலம் தற்போதைய நிலைமை மேலும் குழப்பமடையலாம் எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.