நாளை நாட்டை வந்தடையவுள்ள டீசலை ஏற்றிய கப்பல்
Prabha Praneetha
2 years ago
டீசலை ஏற்றிய கப்பலொன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
நாட்டை வந்தடையவுள்ள குறித்த கப்பலில் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் கொண்டு வரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிய மேலும் சில கப்பல்கள் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.