இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவின் பதவி தொடர்பில் சபாநாயகர் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை!

#Sri Lanka President #Gotabaya Rajapaksa
Nila
2 years ago
இலங்கை  ஜனாதிபதி கோட்டாபயவின் பதவி தொடர்பில் சபாநாயகர் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை!

ஜனாதிபதி   கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவி விலகல் கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியில் இருந்து விலகியதாக கருதப்படவுள்ளது.

அதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் மஹிந்த  யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 எவ்வாறாயினும்  ஜனாதிபதியின்  பதவி விலகல் கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதேவேளை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  தமது பதவி விலகல் கடிதத்தை நேற்றைய தினத்திற்குள் அனுப்பிவைப்பதாக  தொலை பேசி ஊடாக தமக்கு அறிவித்ததாகவும்  சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

 அத்துடன் தாம் இந்த சந்தர்ப்பத்தில்   பாரிய அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த நிலையில் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷ தொடர்ந்தும் மாலைதீவு மாலே நகரில் தங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

இந்த நிலையில்   ஜனாதிபதியின்  பதவி விலகல் கடிதம் இதுவரை கிடைக்கப்பெறபதுள்ள நிலையில் நாளைய தினம்  நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக  நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!