சகல அரச கட்டடங்களையும் மீள கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானம்!
Nila
2 years ago
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை உள்ளிட்ட தம்வசமுள்ள அரச கட்டடங்களை மீள கையளிக்க காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி நடத்தப்பட்ட மாபெரும் போராட்டத்திற்கு போராட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட கட்டடங்களை கைப்பற்றப்பட்டன.
அத்துடன், நேற்று மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு போராட்டத்தையடுத்து, பிரதமரின் அலுவலகமும் போராட்டக்காரர்களின் வசமானது.