மஹிந்த மற்றும் பசில் வழங்கியுள்ள வாக்குறுதி
#SriLanka
#Mahinda Rajapaksa
#Basil Rajapaksa
Prasu
2 years ago
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர் ஆர்டிகல ஆகியோர் நாளை வரை வெளிநாடு செல்லமாட்டார்கள் என அவர்களது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவின் போது, பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இந்த உறுதிமொழியை வழங்கினர்.