13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு

#SriLanka #Douglas Devananda
Prasu
2 years ago
13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு

நாட்டை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் பட்சத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும்  இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் கருத்தை  ஏற்றுக்கொண்ட பிரதமர், அரசியலமைப்பின் அடிப்படையில் விடயங்களை முன்னகர்த்தி நாட்டிற்கு வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதே தன்னுடைய எதிர்பார்ப்பாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதை ஆரம்பமாக கொண்டு முன்னோக்கி நகர்வததே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான நடைமுறை சாத்தியமான வழிமுறை என்பதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.