இராஜினாமா கடிதம் போலியானது!! ஜனாதிபதி செயலகம்
இதனையடுத்து நாட்டில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி மாலைதீவில் தஞ்சமடைந்தார். அத்துடன், ஜூலை 13ம் திகதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். எனினும், அவர் குறிப்பிட்டதை போன்று நேற்றைய தினம் பதவி விலகியிருக்கவில்லை.
இந்நிலையில், இன்றைய தினம் மாலைதீவில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.
இந்நிலையிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகரின் ஊடக பிரிவு இன்று மாலை அறிவித்திருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்த கடிதத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் சபாநாயகரின் ஊடக அலுவலகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம் போலியானது என ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.