பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்!

#Sri Lanka President #Ranil wickremesinghe
Nila
2 years ago
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இடைக்கால ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டிலிருந்து தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு நேற்று இரவு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைத்திருந்தார்.

அதை தொடர்ந்து, இதுவரை பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பை நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டதால், புதிய ஜனாதிபதி தெரிவும் ஓரிரு நாள் பின் செல்லலாம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!