நாட்டின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் - இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம்
Kanimoli
2 years ago
நாட்டின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கட்சி சார்பற்ற மக்களை போராட்டத்தின் நேர்மறையான பொது மக்களின் கருத்துக்களுக்கு செவி சாய்த்து தற்போதுள்ள அரசியலமைப்பின் விதிகளின் அடிப்படையில் ஏற்று கொள்ளக் கூடிய விரைவான தீர்வை எட்டுவது இன்றியமையாதது என அதன் தலைவர் பதுல ஸ்ரீ ரோஹன டி சில்வாவின் கையொப்பத்துடன் அதன் செயலாளர் பிரதீப் லக்ஷந் தெரிவித்துள்ளார்.
இதன்படி கட்சி சார்பற்ற பெரும்பான்மையான மக்களின் கருத்தை மக்களின் பிரதிநிதிகள் செவிமடுத்து அதற்கான தீர்வுகளை நாடாளுமன்றின் ஊடாக உடனடியாக வழங்க வேண்டுமென இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.