பிரதமர் பதவிக்கு சஜித்தின் பெயர் முன்மொழிவு
Prabha Praneetha
2 years ago
அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்பட்ட பெயரை நாளை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரிடம் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பங்குபற்றுதலுடன் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் டலஸ் அழகப்பெருமவின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.