பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகள்
Prabha Praneetha
2 years ago
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கட்டணங்களை எவ்வாறு திருத்துவது என்பது குறித்த பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் முன், பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
அத்துடன் எதிர்வரும் 18ம் திகதி வரை கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்கலாம்.
அதன்பின்னர், மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு பொது பயன்பாட்டு ஆணையத்தால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.