பொதுஜன பெரமுனவிற்குள் வெடித்துள்ள சர்ச்சை : ரணிலுக்கு வாக்களிக்கும் முடிவில் உடன்பாடு இல்லை

Prathees
2 years ago
பொதுஜன பெரமுனவிற்குள் வெடித்துள்ள சர்ச்சை : ரணிலுக்கு வாக்களிக்கும் முடிவில் உடன்பாடு இல்லை

அடுத்த ஜனாதிபதியாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவார் என்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ கருத்து என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவித்ததையடுத்து கட்சிக்குள் பாரிய கருத்து மோதல்கள் எழுந்துள்ளன.

கட்சிக்குள் எந்தவித உத்தியோகபூர்வ கலந்துரையாடலும் உடன்பாடும் இன்றி சாகர காரியவசம் இவ்வாறு கூறியதாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

டலஸ் அழகப்பெரும பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக இருப்பதால் கட்சி அவருக்கு வாக்களிக்க வேண்டும் என ஒரு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பொதுஜன பெரமுனவையில் இருந்து வேறு ஒரு ஜனாதிபதியை நியமிக்கக்கூடாது என திரு.சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேட்பாளரை நியமிப்பதில்லை என கட்சி தீர்மானித்திருந்த போதிலும் டலஸ் அழகப்பெருமவின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!