நிலையான அரசாங்கம் இல்லையென்றால் நாடு மூடப்படும்: மத்திய வங்கி ஆளுநர்
Prathees
2 years ago
நிலையான அரசாங்கம் விரைவில் அமையாவிட்டால் நாடு வீழ்ச்சியடையலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை கூறியுள்ளார்.
எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை செலுத்துவதற்கு போதுமான அந்நிய செலாவணி கிடைக்குமா என்பது தொடர்பில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நிலையான அரசாங்கம் இருப்பதன் அடிப்படையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட சர்வதேச ஆதரவைப் பெற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.