இலங்கையில் கர்ப்பிணித் தாய் போல் நடித்து எரிபொருளை பெற முயன்ற பெண்ணின் வயிற்றிலிருந்து விழுந்த தலையணையால் குழப்பம்
Nila
2 years ago
காலி பிரதேசத்தில் கர்ப்பிணித் தாய் போல் நடித்து எரிபொருளை பெற முயன்ற பெண்ணின் வயிற்றில் இருந்த தலையணை தரையில் விழுந்துள்ளமையினால் அவமானப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வந்ததும் நீண்ட நேரம் வரிசையில் நின்றிருந்த மக்கள் அந்த பெண்ணை கர்ப்பிணி என நினைத்து அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, முதலில் அந்த பெண்ணுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
பின்னர், எரிபொருளைப் பெறுவதற்காக எரிபொருள் நிலையம் அருகே வந்தபோது, வயிற்றில் இருந்த தலையணை தரையில் விழுந்தது.
குறித்த பெண் மிகவும் அவமானத்திற்கு உள்ளானதால் எரிபொருளை எடுக்காமல் அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.