திட்டங்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் முன்வைக்க வேண்டும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான தமது திட்டங்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் முன்வைக்க வேண்டும் என் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, க்களின் குறைகளை புரிந்து கொண்டால் வேட்புமனுக்கள் மற்றும் தேர்தல்கள் தேவைப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், அரசியல் நோக்கங்களை ஒதுக்கித் தள்ளக்கூடிய, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யக் கூடிய ஜனாதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வந்து, தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என்று ரணவக்க வலியுறுத்தினார்.