ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனு ஆரம்பம் - திடீரென முடிவை மாற்றிய சஜித் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்குதல் இன்று நடைபெறவிருந்த நிலையில் சஜித் பிரேமதாஸ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
“நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், நான் நேசிக்கும் மக்களின் நலனுக்காகவும் நான் ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் திரும்பப் பெறுகிறேன். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் அலகபெருமவை வெற்றிபெற கடுமையாக உழைப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் மற்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர திசாநாயக்க ஆகியோரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.