எரிபொருள் பிரச்சினை காரணமாக பல வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன!
![எரிபொருள் பிரச்சினை காரணமாக பல வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன!](https://ms.lanka4.com/images/thumb/download (65).jpg)
எரிபொருள் பிரச்சினை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதேச வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவையாளர்கள் பணிக்கு செல்ல மற்றும் வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல எரிபொருள் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதுவரையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியர்கள் மற்றும் சேவையாளர்கள் எரிபொருள் பிரச்சினையினால் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகிவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலன்னறுவை வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளதாகவும், சிறுவர் வைத்தியசாலை, பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/you.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/fb.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/ins.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/tiktok.png)