கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு!

Prabha Praneetha
2 years ago
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு!

நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் நாளாந்தம் சுமார் 10 நோயாளர்கள் பதிவாகிய நிலையில், தற்போது நாளாந்தம் 25 கொரோனா நோயாளர்கள் பதிவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழைந்ததா என்பதை கண்டறிய வேண்டும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.