மின் கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவு நேற்று நள்ளிரவுடன் நிறைவு

Prabha Praneetha
2 years ago
மின் கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவு நேற்று நள்ளிரவுடன் நிறைவு

மின்சாரக் கட்டண திருத்தத்தை இறுதி செய்யும் செயல்முறைக்கான முன்மொழிவுகளை பொதுமக்கள் சமர்ப்பிக்கும் காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இதுவரை 150 முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், மின் கட்டண திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து பொது கலந்தாய்வை ஜூலை 28ம் திகதி நேரில் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

திருத்தியமைக்க உத்தேசித்துள்ள கட்டணங்களை விவாதித்து இறுதி செய்ய இலங்கைமின்சார சபை (CEB) மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியவற்றை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அழைக்கும் என்று தலைவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு கேட்டுக் கொண்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!