ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் போராட்டம் வெடிக்கும்: ஹிருணிகா
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையானது பதில் ஜனாதிபதியின் அரசியல் சூழ்ச்சியாக இருக்கலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
சில அரசியல் குழுக்களை ஈர்ப்பதற்கான உத்தியாக பதில் ஜனாதிபதி இதனை பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தனது பிம்பத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டால் அமைதியாக இருப்போம், ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் போராடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் எனவும், நாடு இரத்த வெள்ளமாகிவிடும் எனவும் கூறியவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் ரணிலுக்கு பதவி கிடைத்தால் நல்லது எனவும் தெரிவித்துள்ளனர்.