டலஸ்க்கு ஆதரவு வழங்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி!
Reha
2 years ago
நாளைய தினம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பேர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கவுள்ளதாக தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்துள்ளார்.