ஜனாதிபதி தெரிவின் போது வாக்குகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை

Kanimoli
2 years ago
 ஜனாதிபதி தெரிவின் போது வாக்குகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை

நாளைய தினம் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தேர்தலின் போது தமது வாக்குகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதை புகைப்படம் எடுத்தால் 7 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் அல்லது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை சகல விதிகளையும் கடைப்பிடித்து ஜனநாயகத்தை மதித்து ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

உரிய சட்ட கட்டமைப்பிற்குள் ஜனாதிபதியை தெரிவு செய்யும் செயற்பாடுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து தரப்பினரும் இதுவரையில் வழங்கிய ஆதரவை பாராட்டுவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!