வெளிநாட்டுக்கான தபால் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானம்

Kanimoli
2 years ago
வெளிநாட்டுக்கான தபால் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானம்

வெளிநாட்டுக்கான தபால் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

திருத்தப்பட்ட வெளிநாட்டு தபால் கட்டணங்கள் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கைக்கு வரும் விமானங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் வெளிநாட்டு தபால் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தபால் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில்,  இலங்கைக்கான  விமான சேவைகள் இடைநிறுத்தம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, பல நாடுகளுக்கு இடைநிறுத்தப்பட்ட தபால் பொருட்கள் அனுப்பப்படும்   நடவடிக்கை மீண்டும் தொடங்கியுள்ளது.

இதன்படி, அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான தபால் பொருட்கள் அனுப்பப்படும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!