செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவை பாதுகாப்பான தொடருந்து கடவையாக மாற்றம்
Kanimoli
2 years ago
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவை பாதுகாப்பான தொடருந்து கடவையாக புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு இன்று(19) வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்தன அழகக்கோனின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, துடரிகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட போது இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்களால் பாதுகாப்பான தொடருந்து கடவை அமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதேச சபையினால் இறம்பைக்குளம் ஈஷி மிஷனிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய பாதுகாப்புக் கடவை அமைத்து மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது