ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகஸ்ட் 30
ரம்புக்கனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. பி. கீர்த்திரத்ன உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஆகஸ்ட் 30 ஆம் திகதி இடைநிறுத்தி இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
அது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் சமர்ப்பித்த ரிட் மனுக்களை பரிசீலித்த பின்னரே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனு தொடர்பான எழுத்துப்பூர்வ உரைகளை ஆகஸ்ட் 5-ம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறு இரு தரப்புகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.